விவாகரத்து மனு தாக்கல் செய்தார் ரஜினியின் மகள் செளந்தர்யா

விவாகரத்து மனு தாக்கல் செய்தார் ரஜினியின் மகள் செளந்தர்யா

பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினியின் இளையமகள் ஏற்கனவே கணவர் அஸ்வினுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்று செளந்தர்யா செளந்தர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தார்.

2010ஆம் ஆண்டு அஸ்வினுடன் திருமணம் ஆன செளந்தர்யாவுக்கு வேத் என்ற மகன் உள்ளார். தற்போது மகன் வேத், செளந்தர்யாவிடமே உள்ளார்.

இந்நிலையில் கோச்சடையான் படத்தை அடுத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ என்ற படத்தை செளந்தர்யா இயக்கவுள்ளார். இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

Leave a Reply