ராஜமெளலியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல பாலிவுட் நடிகர்

ராஜமெளலியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல பாலிவுட் நடிகர்

உலகமே போற்றி கொண்டாடும் எஸ்.எஸ்.ராஜமெளையின் ‘பாகுபலி 2’ படத்தை பாலிவுட் நடிகரான கமால் ஆர்.கான் என்பவர் மட்டும் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரபாஸை ஒட்டகம் என்றும் படம் படு இரைச்சலாக இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பாகுபலி 2’ திரைப்படம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் ரூ.1500 கோடி வசூலை நெருங்கிவிட்டது. தற்போது கமால்.ஆர்.கான் தனது விமர்சனத்திர்கு ராஜமெளலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘பாகுபலி 2’ படத்திற்கான தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த படம் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு பிடித்துள்ளது. ராஜமெளலி என்னை மன்னிக்க வேண்டும் என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply