திருப்பதி ஏழுமலையான் சொர்க்கவாசல் டிக்கெட் வேண்டுமா? இதோ முழு விபரங்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என்பதை அடுத்து இன்று முதல் உள்ளூர் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது..

ஜனவரி 13ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை திருமலை ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்

இந்த நிலையில் திருப்பதி மற்றும் திருமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் தரிசனம் செய்ய இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த டோக்கன்களை அதற்குரிய கவுண்டர்களில் ஆதார் அட்டையை காண்பித்து பெற்று கொள்ளலாம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது