மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா?

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் மீண்டும் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து சிறுத்தை சிவா மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது