shadow

soniaகடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றார். அவர் எந்த நாட்டிற்கு சென்றார், எப்போது நாடு திரும்புவார் என்பது அவர் திரும்பும் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராகுல்காந்தியின் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி நேற்று திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார்.

சொந்த பணி காரணமாக சோனியா காந்தி வெளிநாடு சென்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியிருந்தபோதிலும், அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சோனியா காந்தியுடன் அவருடைய மகள் ப்ரியங்கா காந்தியும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, “சோனியா காந்தி சொந்தப் பணி காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.  எதற்காக வெளிநாடு சென்றுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. எனினும், ஒரு வாரத்தில் நாடு திரும்புவார். என்று தெரிவித்தார். ம்மேலும் ராகுல் காந்தியும் இன்னும் சில நாட்களில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Leave a Reply