மகத் அறிமுகமாகும் பாலிவுட் படத்தில் இரண்டு ரஜினி பட நாயகிகள்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான மகத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரைப்பட வாய்ப்புகளை அதிகம் பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்

அவர் தற்போது ’கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ ’இவன் தான் உத்தமன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த சோனாக்ஷி சின்கா மற்றும் ஹூமா குரேஷி ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர் என்பதும் இருவருமே ரஜினியுடன் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது