கொரோனா பீதி எதிரொலி: சிறைக்கைதிகளுக்கும் கட்டுப்பாடு:

கொரோனா பீதி எதிரொலி: சிறைக்கைதிகளுக்கும் கட்டுப்பாடு:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது சிறை கைதிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் சிறைக் கைதிகளை சந்திக்க இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக சிறையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு சந்திக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

சிறைக் கைதிகளை சந்திக்க வருபவர்களால் கொரோனா வைரஸ் பரவினால், சிறை முழுவதும் பரவ வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply