shadow

அரசியல்வாதிகளின் தூண்டுதலால் நெடுவாசல் போராட்டம். தமிழிசை குற்றச்சாட்டு

நெடுவாசல் போராட்டத்தை அரசியல்வாதிகள் தூண்டிவிடுவதால் இந்த பிரச்சனை பெரிதாக பார்க்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 தினங்களாக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது.. ஆனால் அதேசமயம் சில அரசியல் தலைவர்கள் தங்கள் சுயநலம் கருதி, நெடுவாசல் போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர். போராட்டக்காரர்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தகவல் வந்துள்ளது.’ என்று கூறினார்.

ஆனால் இந்த பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, வடகாடு, நெடுவாசல், கோட்டைக் காடு, கருக்காகுறிச்சி, வானக் கண்காடு ஆகிய இடங்களில் ஆழ் துளைக் கிணறு அமைத்து எரிபொருள் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மத்திய அரசு, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது. அவ்வாறு எரிவாயு எடுத்தால், சோலைவனமாக இருக்கும் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி போராடி வருகின்றனர்.

Leave a Reply