புதுடெல்லியில் இன்று நடந்த டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் சோம்தேவ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

கஜகஸ்தான் வீரர் எவ்ஜென்சி டான்ஸ்காய்யுடன் மோதிய சோம்தேவ், மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-4, 6-2 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார். அவர் இந்த வெற்றியை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் ஒன்றரை மணிநேரம் மட்டுமே. உலக தர வரிசையில் 96 வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் சோம்தேவ்வுக்கு இது ஒரு மகத்தான வெற்றி ஆகும்.

டெல்லி ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற சோம்தேவுக்கு முன்னணி அரசியல் தலைவர்களும், சக விளையாட்டு வீரர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply