shadow

இலங்கை சென்ற எண்ணெய் கப்பல் கடத்தல். சோமாலிய கொள்ளையர்கள் கைவரிசையா?

வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கைக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றை சோமாலியா கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து, கடத்திச் சென்றதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை கடல் கொள்ளைக்கு எதிரான கண்காணிப்பு முகமை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்கள் அந்த கப்பலை சுற்றி வளைத்தபோது அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பியதாகவும், பின்னர் அது செல்லும் பாதையை கண்காணிக்கும் கருவியின் அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

துபாய் நாட்டை சேர்ந்த அந்த கப்பலை கொள்ளையர்கள் எந்த இடத்துக்கு கடத்திச் சென்றுள்ளனர் என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. வழக்கமாக சிறியரக கப்பல்களை மட்டும் கடத்தும் சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு இதேபோன்றதொரு பெரிய சரக்கு கப்பலை கடத்திச் சென்று, பெரிய அளவிலான தொகையை பெற்றுகொண்டு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply