பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நாளை புவி அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் உலக நாடுகளில் இருந்து அழகிகள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் ‘பெமினா மிஸ் இந்தியா’ அழகி, 21 வயதான சோபிதா துலிபாலா கலந்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சோபிதா, சுற்றுச்சூழல் அழகியாக (மிஸ் எக்கோ பியூட்டி) நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கம் வென்றார். இவர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று இந்தப் பட்டத்தை வென்றார். இந்தப் புவி அழகிப் போட்டியில் ஏற்கனவே புகைப்படம் எடுக்க ஏற்ற எடுப்பான முகத்தோற்ற அழகியாக (போட்டோஜெனிக்) தேர்ந்தெடுக்கப்பட்டு இவர் தங்கப்பதக்கம் பெற்றார்.

Leave a Reply