கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கடுமையான பனிப்புயல் வீசி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அந்த சேதத்தில் இருந்து தற்போது அந்நாட்டு மக்கள் மீண்டு வரும் நிலையில் மீண்டும் அங்கு பனிப்புயல் வீசத்தொடங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நேற்று இரவு அமெரிக்காவில் உள்ள பல நகரங்களில் கடுமையான பனிப்புயல் வீசியது. வாஷிங்டன் நகரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டிகள் அதிகளவில் படர்ந்து இருப்பதால் வாகனங்களை மிகவும் மெதுவாக இயக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர். முதியோர் மற்றும் குழந்தைகள் வெளியே வரவேண்டாம் என்றும் சுற்றுப்புற சூழல் துறை எச்சரித்துள்ளது.

நேற்று இரவு அமெரிக்காவில் -26 டிகிரி வரை கடும்குளிர் இருந்ததாகவும், அதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 3000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான பனிப்பொழிவு காரணமாக மின்கம்பங்களில் கோளாறுகள் ஏற்பட்டு சில இடங்கள் இருளில் மூழ்கியிருக்கின்றன.

Leave a Reply