ஓவியா-சினேகன் ஜோடியில் புதிய திரைப்படம்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர்கள் இருவர். ஒருவர் நடிகை ஓவியா இன்னொருவர் கவிஞர் சினேகன். இந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சினேகன் தற்போது கமல்ஹாசன் கட்சியின் அரசியல் பணிகளுக்கு இடையே ‘பனங்காட்டு நரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
‘பனங்காட்டு நரி’ படத்தை ‘யமுனா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்குகிறார். ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது.
இந்த படத்தின் ஒன்லைன் கேட்டு ஓவியா ஓகே சொல்லிவிட்டதாகவும், விரைவில் முழுக்கதையையும் கேட்டு இந்த படத்தில் நடிப்பதை ஓவியா உறுதி செய்வார் என்றும் கூறப்படுகிறது.