சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் உறுதி செய்யாமல் இதுபோன்ற விஷயங்களை சொல்ல முடியாதே. ஏற்கனவே இதுபோன்றதொரு வதந்தி கிளம்பியிருக்கிறது. நாம் எதிர்பார்த்த மாதிரியே அது வதந்திதான்.

பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடித்து வரும் உன் சமையல் அறையில் படத்தில் சினேகாதான் ஹீரோயின். படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் தயாராகிறது. தெலுங்குப் படம் ஒன்றிலும் சினேகா கமிட்டாகியிருக்கிறார்.

நாங்க பிஸியா நடிச்சிட்டிருக்கோம். அதனால் இப்போதைக்கு குழந்தை விஷயத்தை தள்ளிப் போட்டிருக்கோம். எதாவது நல்ல சேதி இருந்தா நானே உங்களை கூப்பிட்டு சொல்றேன் என பிரசன்னாவே ட்விட்டரில் எழுதியிருக்கிறார்.

Leave a Reply