shadow

டெங்குவை கண்டிபிடிக்க மொபைல் ஆப். இந்திய வம்சாவளியினர் சாதனை

மனித இனத்தை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று டெங்கு. இந்த நோயினால் உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோயை வெறும் முப்பது நிமிடங்களில் கண்டுபிடிக்கும் மொபை ஆப் ஒன்றை இந்திய வம்சாவளியினர் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். மேலும் இந்த ஆப் மூலம் ஜிகா நோயையும் கண்டுபிடிக்கலாம்

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ‘சாண்டியா கெமிக்கல் லேப்ரட்டரி’ ஆராய்ச்சி கூடத்தின் உதவியால் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

டெங்கு, ஜிகா போன்ற நோய்களை மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிய நாட்கணக்கில் காத்திருக்கும் நிலைமை உள்ள நிலையில் இந்த ஆப் மூலம் வெறும் முப்பதே நிமிடங்களில் நோயின் தாக்கத்தை கண்டுபிடித்துவிடலாம். மைக்ரோ வேவ் ஓவன் அளவு உள்ள ஒரு கருவியின் மேல் இந்த ஆப்பை ஓபன் செய்து வைத்துவிட்டால், 30 நிமிடத்தில் நமது சோதனையின் முடிவை புகைப்படமாக அனுப்பிவிடும். அந்த புகைப்படத்தின் நிறத்தை வைத்து இந்த நோய்களை உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply