shadow

ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பபட்ட அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீனிவாசின் உடல்

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த பொறியாளர் சீனிவாசனின் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட தாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் ஹைதராபாதைச் சேர்ந்த 32 வயது மென்பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோதலா என்பவர் கடந்த சமீபத்தில் அமெரிக்காவில் இந்தியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறிக்கொண்டே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் சீனிவாசன் கொல்லப்பட்டார். மேலும் அவருடன் பணிபுரியும் மற்றொரு  என்ஜினீயர் அலோக் மதசானி மற்றும் அமெரிக்கர் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அமெரிக்க இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்டியது

இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சீனிவாசின் உடல் சொந்த ஊரான ஐதராபாத்திற்கு இன்று கொண்டு வரப்படப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சீனிவாசின் தாயார் வர்தினி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எந்த தாய்க்கும் இதுபோன்ற வேதனை வரக்கூடாது, இது போன்ற  சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்து இந்தியர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு உயர் கல்வியறிவு இல்லை என்றாலும், தனது மகனை படிக்க வைத்தோம். அவனது பெயர் சொல்லும்படி சிலரை அவன்  சம்பாதித்துள்ளான். என் மகன் குறித்த டிவி, செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட செய்தியா வர வேண்டும். இத்தகைய செய்திகள் வரும்  என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை’ என்று வேதனையுடன் கூறினார்.

Leave a Reply