shadow

Shiva_Lingam சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பரவியுள்ளது. ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. லிங்கம் இல்லாமல் மூர்த்தி பேதம் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது. சிவம் என்றால் இறைவன். லிங்கம் என்பது அடையாளம். எனவே சிவலிங்கம் என்பது இறைவனை அடைவதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கான ஒரு அடையாளச் சின்னம் அல்லது ஒரு குறி ஆகும். லி – லயம், கம் — தோற்றம். உலகின் அனைத்து பொருட்களும் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்குமான இடம்

சிவலிங்கம் என்றால் சிவனின் அருவுருவ திருமேனி அதாவது உருவத்திற்கும் அருவத்திற்கும் இடைப்பட்ட ஒரு அடையாளமேயாகும். இதனையே

காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்

நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்               என்கிறார் சேக்கிழார்.

 லிங்க புராணத்தில் சிவலிங்கம் பற்றி என்ன சொல்லப்பட்டிக்கிறது எனப்பார்த்தால் மேற்பகுதி அண்ட சராசரங்களையும் கீற்பகுதி அண்டசராசங்களை தாங்கி நிற்கும் மிக அளப்பரிய சக்தியையும் குறிக்கும் என செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சில மேலை நாட்டு ஆராச்சியாளர்கள் இதனை ஆண், பெண் பிறப்புறுப்புகளின்சேர்க்கை என கொச்சைப்படுத்தி உள்ளதையும் நாம் உற்று நோக்க வேண்டும். இங்கு இருக்கும் தங்களை புதுமை வாதிகள் எனக் கூறிக் கொள்ளும் அல்லது காட்டிக் கொள்ள விரும்பும் சிலர் உண்மை தத்துவத்தினை புரிந்து கொள்ளாமல் இதனை தூக்கிப் பிடித்து பேசுவதை நாம் காணலாம். இவர்களைப் பொருத்த வரையில் இங்கு இருக்கும் தத்துவங்களின் உண்மை என்ன என்பதை பகுத்து ஆராயமல் கண் மூடித்தனமாக மேலை நாட்டவர் சொல்லும் கருத்திற்கு மதிப்பளித்து அதனை கூறுவதன் மூலம் தங்களை புதுமைவாதிகளாக காட்டிக் கொள்வதேயாகும். சிவ புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி சிறிதிற்கும் சிறிதான – பெரிதிற்கும் பெரிதான சகலத்தையும் உள்ளடக்கிய ஒரு ஸ்தம்பம் எனக் குறிப்பிடுகிறது. இதனையே மாணிக்கவாசகர் அணுவிற்குள் அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய் என கூறுகிறார். இந்த கருத்தும் லிங்க புராண கருத்தினையே வலியுறுத்துகிறது.

siva-lingam

சுவாமி விவேகானந்தர் பிரான்சு நாட்டில் 1900 தில் நடந்த சமயங்களின் சரித்திரங்கள் என்ற மகா நாட்டில் ஜேரமனிய நாட்டவரான குஸ்டவ் ஒப்பேர்ட் எனபவரின் கட்டுரைக்கு பதிலளிக்கும் போது சிவலிங்கம் என்பது யுப ஸ்தம்பம் அல்லது யுப கம்பம் அதாவது வேதங்களின் சாரங்களை அடிப்படையாகக் கொண்ட மகா பிரம்மத்தின் அடையாளச் சின்னமே எனக் குறிப்பிட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் வெளிப்படுகின்றன.

தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்கஉருவம் உணர்த்துகிறது. லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய  மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக் கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இவ்வாராக மூவரின் ஆற்றலையும் உள்ளடக்கிய பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம்.

சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.

சிவ ஆகமப்படி பீடமானது சக்தியையும் (நாதம்), லிங்கமானது (விந்து) சிவனையும் குறிக்கும் ஒரு சிவசக்தி சொருபமே சிவலிங்கமாகும். பஞ்சாட்சர தத்துவத்தில் சிவவிங்கம்

கீழ்ப்பாகம்      — ந

நடுப்பாகம்      — ம

மேல்ப்பாகம்    — சி

நாதக்குழி         — வ

லிங்கம்             — ய        ஆகும்.

இவை நிவர்த்தி கலை, பிரதிஸ்டைக் கலை, வித்தியாக் கலை, சாந்திக் கலை, சாந்தியாதீதக் கலை என்று பஞ்சகலா சக்தி ரூபமாகிறது. சிவலிங்க வடிவம் சுயம்புவாக தோன்றியது. இது உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும். இயற்கையோடு இசைந்த தத்துவம். நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.           நம்நாட்டில் சநாதன தர்மத்தோடு அடையாளப் படுத்தப் பட்ட இந்தலிங்க வடிவானது அனைத்துச் சமயங்களையும் கடந்த ஓர் அற்புததத்துவமாகும். தவஞானிகளின் ஆற்றல்களாலும், கோயில்களில்சொல்லப் படுகின்ற மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும்அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்துவைத்துக்கொள்ளக் கூடிய பிரம்மாண்டமானபேராற்றல் இயற்கையிலேயே லிங்கவடிவத்திற்கு உள்ளது என அறிவியல்வல்லுநர்களும் கூறுகின்றனர். அமெரிக்கக்கண்டத்தின் பெரு என்னும் நாட்டின் தத்துவத்துறை திறனாய்வாளர் John Stephen என்பவர்இந்தக் கருத்தை வலியுறுத்தி SIVALINGAMஎன்றதொரு ஆய்வு நூலை எழுதி இருக்கிறார். அண்டம் அளப்பரியஆற்றல்களை – சக்தியை தன்னகத்தே கொண்டது என்பதை தற்காலவிஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது. இதனை தன்னகத்தே ஈர்க்கும்ஆற்றல் கொண்ட அமைப்பே லிங்க வடிவமாகும்.

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்களத்தின் அதாவது சுபத்தின் அடையாள வடிவமே சிவலிங்கமாகும்.

பளிங்கினால் செய்யப்பட்ட ஸ்படிக லிங்க வழிபாடு தான்சிறந்த வழிபாட்டு வகையாக கருதப்படுகிறது. காரணம் அந்தபொருளுக்கு அதற்கென சொந்தமாக நிறம் கிடையாது. அதுஎதனோடு தொடர்பில் ஈடுபடுகிறதோ அதன் நிறத்தையே பெறுகிறது.அதனால் அது ‘நிர்குண பிரம்மன’ அல்லது இயல் பண்புகள்முற்றிலும் ஒழிந்த முதன்மை சக்தி அல்லது உருவமற்ற சிவனைகுறிக்கும்.

அணுமின் நிலையங்களின் கொதிகலன்கள் 90விழுக்காடு லிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. இதனையும் கருத்திற் கொண்டு ஆய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும். எல்லையற்று விரிந்துஇ பரந்து இருக்கும் ஓர் அளப்பரிய சக்தியின் அல்லது இறைத் தன்மையின் ஆதிவடிவமேலிங்க வடிவமாகும்.

 சிவதியானத்தில் முதல்படி சாதாரணமாக நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் வைத்திருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது. அருணகிரிநாதர் இதனை ஒட்டியே “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.

உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்ற நிலையை அடைகிறார். அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதனையே சான்றோர்கள் “தெள்ளத் தெளிந்தாரிற்கு சீவன் சிவலிங்கமாமே” என்று கூறியுள்ளனர். தெள்ள தெளிந்து முழுமையாக உணரந்தவரிறகே சீவன் சிவலிங்கமாகும். இதுவே இந்து மதத்தினரின் இறுதி நிலையாகும். இதனையே “தத்துவ மசி” — நான் அது ஆதல். “அஹம் பிரமாஸ்மி” – நானே கடவுள் என வேதங்கள் சொல்கின்றன.

இமயமலையில் பனி லிங்கமாகவும், இயற்கையில் விளைந்த பாணலிங்கமாகவும் சிவலிங்கங்கள் உள்ளன. தன்னைஇறுக கட்டி பிடித்த அதாவது உன்னைத் தவிர எனக்கு யாருமில்லை என்று பரிபூரண நம்பிக்கையுடன் வழிபட்ட மார்க்கண்டேயரிற்கு சிரஞ்சீவி தன்மையான என்றும் பதினாறு ஆயுளைக் கொடுத்தது சிவலிங்க வழிபாடேயாகும். வேடுவனாக இருந்த ஒருவனை எல்லாவற்றிலும் உயர்ந்தது சிவலிங்கமே என்ற எண்ணத்துடன் ஆற்றிய அளப்பரிய தொண்டினால் கண்ணப்பர் என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்தியதும் சிவலிங்க வழிபாடேயாகும். யானைக்கும், சிலந்திக்கும் உயர்ந்த மோட்ச நிலையைக் கொடுத்ததும் சிவலிங்கத்திற்கு செய்த தன்னலமற்ற சேவையே ஆகும்.

முழுநம்பிக்கையுடன் ஆகம முறைப்படி பூசை செய்து மார்க்கண்டேயரிற்கு இறவா நிலையை தந்தது சிவலிங்க வழிபாடேயாகும். தனக்கு தெரிந்த பொருட்களிலேயே உயர்ந்த அதாவது ஒரு வேடனைப் பொருத்த வரையில் முக்கியமானது உணவு அதுவும் மாமிசமும், தேனும் ஆகும். அதிலும் அதனை சுவைத்து பார்த்து சுவைமிகுந்த பகுதியையே தேனில் தேய்த்து இறைவனிற்கு அர்பணிக்க வேண்டும் என்ற அந்த உயர்ந்த நோக்கம் இவையே கண்ணப்ப நாயனாராக்கியது. தமது அறிவிற்கு எட்டிய வழியில் அதாவது ஆறாவது அறிவு இல்லாத யானையும, சிலந்தியும் தமது அறிவிற்கு எட்டிய வழியில் பரிபூரண பக்தியுடன் இறைத்தொண்டு அதாவது சிவலிங்கத் தொண்டு செய்து மோட்சமடைந்ததையும் நாம் உற்று நோக்க வேண்டும். இதன் மூலம் பரிபூரண நம்பிக்கையுடனான சிவலிங்க வழிபாடு நமக்கு உண்ணத பெருவாழ்வினைத் தரவல்லது. விதிமுறை வழிமுறை முக்கியமில்லை பரிபூரண நம்பிக்கையே முக்கியமாகும்.

Leave a Reply