shadow

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ஃபர்ஸ்ட்லுக் காப்பியா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்த இரண்டு ஹாலிவுட் படங்களில் சாயலாக உள்ளதாகவும், இந்த ஃபர்ஸ்ட்லுக் டிசைன் ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் நெட்டிசன்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் வரும் ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply