shadow

ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டே வரும் நிலையில் வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ள ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் உள்பட பல்வேறு கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ‘தனி ஒருவன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜெயம் ராஜா இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பாக்யராஜ் கண்ணன் படத்தின் படப்ப்பிடிப்பு முடிந்தவுடன் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply