நான் செஞ்சது தப்பா? ‘மாநாடு’ நடிகரிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகேயன்

sivakarthikeyan

சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் இன்று பல்வேறு தடைகளை தாண்டி வெற்றிகரமாக ரிலீஸ் ஆனது

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

மேலும் சிம்பு, வெங்கட்பிரபு, கல்யாணி பிரியதர்ஷன், யுவன் சங்கர் ராஜா, சுரேஷ் காமாட்சி ஆகியோரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் அடித்த பிரேம்ஜி அமரன் ’என்னுடைய பெயரை குறிப்பிடவில்லையே’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘நீங்களும் வெங்கட் பிரபு சார் அவர்களும் ஒன்றுதான் என்று நினைத்துதான் உங்கள் பெயரை சேர்க்கவில்லை. இப்ப சொல்லுங்க நான் பண்ணியது தப்பா சார்? என்று கேள்வி கேட்டுள்ளார்.