shadow

சிவகார்த்திகேயனின் புதிய பட பூஜை
sivakar
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் மேல் முடிவடைந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் மிக எளிமையாக நடந்தது.

‘ரெமோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 AM Studios என்ற நிறுவனமே அவருடைய அடுத்த படத்தையும் தயாரிக்கின்றது. ‘தனி ஒருவன்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய ‘ஜெயம் ராஜா’ இந்த படத்தை இயக்குகிறார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஆரம்பிக்கப்படும் என்றும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்த அரவிந்தசாமி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் ஆனால் அவருடைய கேரக்டர் வில்லன் கேரக்டர் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Chennai Today News: Sivakarthikeyan’ next with Mohan Raja

Leave a Reply