shadow

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முழு தகவல்கள்

‘வேலைக்காரன்’ படத்தை அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் சிறப்பாக நடந்தது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படத்துக்காக சிலம்பக் கலையை கற்றுக் கொண்டுள்ளார் சமந்தா.

இசை – இமான், ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம், எடிட்டிங் – விவேக் ஹர்ஷன், பாடல்கள் – யுகபாரதி, கலை இயக்குநர் – முத்துராஜ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு, கிராபிக்ஸ் – கமலக்கண்ணன், உடைகள் வடிவமைப்பு – அனு பார்த்தசாரதி மற்றும் எகா லக்கானி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது.

Leave a Reply