shadow

படப்பிடிப்பு முடியும் முன்பே வியாபாரத்தை தொடங்கிவிட்ட சிவகார்த்திகேயன் திரைப்படம்

அஜித், விஜய்க்கு அடுத்தபடியான மார்க்கெட்டை பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது.

இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி மிகபெரிய தொகை கொடுத்து கைப்பற்றியிருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை 24எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Leave a Reply