shadow

அஜித் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்
tamil-movies-sivakarthikeyan-press-meet-stills39
அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது இயக்குனர் சிவா ‘அஜித்த்தின் 57வது படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்தின் பணிகளில் பிசியாக உள்ள சிவா, இந்த படம் முடிந்தவுடன் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளார் என்ற் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது 24 AM Studios நிறுவனம் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ‘ரெமோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கின்ரார். இந்த படத்தை அடுத்து அவர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்த இரண்டு படங்களையும் முடித்தபின்னரும் அதே நேரத்தில் ‘அஜித் 57’ படத்தை சிவா முடித்தவுடனும் சிவகார்த்திகேயன் – சிவா  இணையும் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply