shadow

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம்: மொக்கையா? சூப்பரா? திரைவிமர்சனம்

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் சூப்பராக இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன

பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சமுத்திரக்கனிக்கு சிவகார்த்திகேயன் என்ற ஆண் குழந்தை பிறந்ததால் வெறுப்புடன் வளர்க்கிறார். இதனால் அடாவடித்தனமாக வளரும் சிவகார்த்திகேயன் பள்ளி கல்லூரிகளில் செய்யும் சேட்டை, அவருடைய சேட்டை தாங்க முடியாமல் அவதிப்படும் ஆசிரியர்கள், பிரியங்கா மோகனுடன் பள்ளியில் தொடங்கிய காதல் கல்லூரியிலும் தொடர்வது, இறுதியில் அப்பா அம்மா மற்றும் ஆசிரியர்களை மதித்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற மெசேஜ் உடன் படம் முடிகிறது

சிவகார்த்திகேயன் படம் முழுக்க கலகலப்பாக வருகிறார். குறிப்பாக பள்ளி காட்சிகளில் அவருடைய நடிப்பு அபாரம். கல்லூரி காட்சிகளில் அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்று தெரிகிறது

குறிப்பாக அவருடன் கொட்டமடிக்கும் நண்பர்களாகவே ஆர்ஜே விஜய், சிவாங்கி பால சரவணன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ் ஜே சூர்யா பேராசிரியராகவும், சிவகார்த்திகேயன் தந்தையாக சமுத்திரகனியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்

அனிருத் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் என்ற நிலையில் பின்னணி இசையும் அபாரமாக உள்ளது. மொத்தத்தில் சிபிச்சக்கரவர்த்தி இந்த படத்தை முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு அம்சமாக கொடுத்ததோடு கடைசியில் மாணவர்களுக்கு ஒரு சிறப்பான மெசேஜ் சொல்லி இருக்கிறார்

டாக்டர் படத்தை அடுத்து இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை