மீண்டும் கல்லூரிக்கு செல்லும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘டான்’

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்கள் கதையம்சம் கொண்டது என்பதும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.