shadow

விஷால் மற்றும் ஆர்யாவை நடிகர் சிவகார்த்திகேயன் முந்தி விட்டதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஷால் நடித்த எனிமி மற்றும் ஆர்யா நடித்த அரண்மனை 3 ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் ஆயுத பூஜை தினத்தில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எனிமி மற்றும் அரண்மனை 3 ஆகிய இரண்டு படங்களுக்கும் முன்பாக அதாவது அக்டோபர் 9ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த தகவல் சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.