shadow

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் ஆதித்யா பாடிய இந்த பாடலில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்பட பலர் நடித்துள்ள ‘டான்’ திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். ’டாக்டர்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை அடுத்து வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.