நயன்தாராவுடன் இணைந்த சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி
நடிகை நயன்தாரா நடித்து முடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஒன்று ‘கோலமாவு கோகிலா’ மற்றொன்று ‘இமைக்கா நொடிகள். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பதும் ‘எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சு’ என்ற இந்த பாடல் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நயன்தாரா வின் இன்னொரு படமான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதுகுறித்த ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நயன்தாரா படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.