கோலிவுட்டில் உருவாகியுள்ள புதிய போட்டி நடிகர்கள்?

siva and sethupathiஎம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி – கமல், அஜீத்-விஜய், தனுஷ் -சிம்பு  ஆகிய ஜோடிகள் கோலிவுட்டில் போட்டி நாயகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்த பட்டியலில் இன்னும் ஒரு ஜோடி சேர்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த ஜோடி சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி.

தற்போது சிவகார்த்திகேயன் ரஜினி முருகன்’ என்ற படத்திலும் விஜய் சேதுபதி ‘நானும் ரவுடிதான்’ உள்பட பல படத்திலும் நடித்து வருகின்றனர். இதில் ரஜினிமுருகன், நானும் ரவுடிதான் ஆகிய இரண்டு படங்களிலும் நடிப்பவர் ராஜ்கிரண். இவரிடம் இருவருமே அவர் எப்படி நடிக்கிறார் என்று ஒருவர் குறித்து ஒருவர் விசாரித்து கொண்டு வருகின்றார்களாம்.

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை சரியாக போகாததால் வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன், நானும் ரவுடிதான் படத்தின் ரிசல்ட்டை கூர்ந்து கவனிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் நயன்தாரா இருப்பதால் படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்று விஜய் சேதுபதி தரப்பில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். எப்படியாவது காக்கி சட்டை படத்தை விட அதிக வசூலை நானும் ரவுடிதான் படம் பெறவேண்டும் என விஜய் சேதுபதி தரப்பில் இருந்து கடவுளை வேண்டிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply