இரவோடு இரவாக மெரீனாவில் இருந்து சிவாஜி சிலை அகற்றம்

இரவோடு இரவாக மெரீனாவில் இருந்து சிவாஜி சிலை அகற்றம்

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படி நேற்று இரவோடு இரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றப்பட்டு அடையாறு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசு ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று இரவு சிலை அகற்றப்பட்டது. சிவாஜி சிலையை அகற்ற கூடாது என்று சிவாஜி மன்றத்தினர்களும், சில அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நேற்று இரவு சிலை அகற்றப்பட்டதால் சிவாஜி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

விரைவில் சிவாஜி சில இருந்த மேடையும் அகற்றப்பட்டு சாலை போக்குவரத்துக்கு வசதி செய்யப்படும் என தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published.