shadow

தல…விடுதல…அஜித்துக்காக சிறுத்தை சிவா எழுதிய பாடல்

தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் கிட்டத்தட்ட பாடல்கள் ஒலிப்பதிவு பணியை முடித்துவிட்டார். இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ள நிலையில் வரும் 10ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாக உள்ளது.

‘ஆலுமா டோலுமா’ ஸ்டைலில் அட்டகாசமாக அனிருத் கம்போஸ் செய்த ஒரு டியூனுக்கு ‘தல..விடுதல..என்று தொடங்கும் பாடலை இயக்குனர் சிறுத்தை சிவா எழுதியுள்ளார். இந்த பாடல் தான் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ‘விவேகம்’ படத்தின் டீசர் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் டிசர் வெளியாகும் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *