shadow

‘தல 56’ படத்திற்காக லொகேஷன் தேடும் சிறுத்தை சிவா

19-1432035344-thala57தல அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அவருடைய அடுத்த படமான ‘தல 57’ திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தை மீண்டும் சிறுத்தை சிவா இயக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான லொகோஷன் தேடும் பணி ஆரம்பமாகியுள்ளது

இதற்காக இயக்குனர் சிறுத்தை சிவா தலைமையிலான ஒரு குழு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் விரைவில் படத்திற்கான லொகேஷன் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. வரும் ஜூலை முதல் தொடங்கப்படவுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வேதாளம்’ படத்திற்கு பின்னர் மீண்டும் அனிருத் இசையமைக்கின்றார்.  இந்த படம் இவ்வருட தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply