பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்தார்: திரையுலகினர் அஞ்சலி!

பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் சற்று முன்னர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 92.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் சற்று முன் அவர் காலமானார் என்ற தகவல் இசைத் துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லதா மங்கேஷ்கர் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.