மறுபடியும் தள்ளிப்போனது ‘எஸ்3’

மறுபடியும் தள்ளிப்போனது ‘எஸ்3’


சூர்யாவின் ‘எஸ்3’ திரைப்படத்தின் ரிலீஸ் ஏற்கனவே இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை தள்ளிபோய் உள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்சனை காரணமாக தமிழக மக்கள் ஒருவித பதட்டத்துடன் இருப்பதால் இந்த நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வது சரியானதாக இருக்காது என்ற காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளை பொறுத்தவரையில் இந்த தேதி சரியான ரிலீஸ் தேதி இல்லை என்று விநியோகிஸ்தர்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.