திருமணம் முடிந்து பைக்கில் திரும்பும் புதுமண தம்பதிகள்!

எளிமையான திருமணம்! 

கோவில்பட்டியில் எளிய முறையில் திருமணம் செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பும் தம்பதி குறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்ட பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்பட்டியில் ஊரடங்கை முன்னிட்டு ஒரு ஜோடிக்கு எளிய முறையில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன் மணமகன் பைக் ஓட்ட, அதன்பின்னால் மணமகள் உட்கார்ந்து பைக்கில் வீடு திரும்பினர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.