shadow

download (3)

டிப்ஸ்… டிப்ஸ்…

  • எந்த ஸ்வீட் செய்தாலும், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு கற்கண்டை பொடி செய்து சேர்த்தால், சுவை கூடும்.
  • சாம்பார் பொடி தயாரிக்கும்போது, ஒரு துண்டு சுக்கையும் தட்டிப் போட்டு அரைத்தால், பருப்பினால் உண்டாகும் வாயுத்தொல்லை இருக்காது.
  • ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து, மோரில் கரைத்து, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால்… வயிற்றுப்போக்கு, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • வெயில் காலத்தில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக்கொள் வது நல்லது. வெல்லம் சூட்டைக் குறைப்பதுடன். இரும்புச் சத்தையும் அளிக்கவல்லது.
  • அடிக்கடி இருமல், தும்மல் ஏற்படுகிறதா? அகத்திக் கீரை, அகத்திப்பூ சாறுகளுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.
  • ஒரு பிடி அவலை ஊறவிட்டு… சிறிதளவு மிளகு, தேங்காய்த் துருவல் சேர்த்து பால்விட்டு அரைத்து, புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பம் செய்தால், புளிப்பே இருக்காது.
  • சமைத்த பாத்திரங்களில் உள்ள எண்ணெய்ப் பசையை எளிதாக சுத்தம் செய்ய ஓர் உபாயம்… ஐஸ் க்யூப் ஒன்றைப் போட்டு, க்ளீனிங் பவுடர் போட்டுத் தேய்த்தால், பளிச் என்று ஆகிவிடும்.

–  நன்றி விகடன்

Leave a Reply