shadow

இரண்டு பாகங்களாக வெளிவரும் சிம்புவின் ‘AAA’

சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையி இந்த படம் தற்போது இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளதாகவும், முதல் பாகம் ஜூன் 23ஆம் தேதியும் இரண்டாம் பாகம் இவ்வருட இறுதியிலும் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் முதலில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டாலும், தற்போது அவர் நான்கு வேடங்களில் நடித்து வருவதாகவும், எனவே முதல் இரண்டு கேரக்டர்களான மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய கேரக்டர்கள் முதல் பாகத்திலும், மீதியுள்ள இரண்டு கேரக்டர்கள் இரண்டாவது பாகத்திலும் இருக்கும் என்ரு கூறப்படுகிறது.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, நீது சந்திரா, சனாகான், மகத், விடிவி கணேஷ், கோவை சரளா, ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்

Leave a Reply