shadow

நயன்தாராவின் திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைப்பேன். சிம்பு அதிர்ச்சி தகவல்

nayanநயன்தாராவும் சிம்புவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நெருக்கமாக இருந்ததும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட செய்தியும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நயன்தாராவின் திருமணத்தை நானே என்னுடைய தலைமையில் நடத்தி வைப்பேன் என சிம்பு நேற்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று ரிலீசான சிம்புவின் ‘வாலு’ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் பல கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்து கொண்டு வரும் நிலையில் ஒரு நிருபர், ‘உங்கள் முன்னாள் காதலி நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதாக செய்தி வருகின்றதே, இது உண்மையெனில் உங்கள் கருத்து என்ன? என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிம்பு, ‘இருவருமே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான். அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான உறவு இருக்கின்றது எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் இருவரும் காதலிப்பது உண்மையான இருந்தால், அவர்களுக்கு எனது தலைமையில் நானே திருமணத்தை நடத்தி வைப்பேன்’ என்று கூறினார்.

மேலும் விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், எதிர்காலத்தில் அஜீத் மற்றும் ரஜினி படங்களை இயக்க விருப்பம் என்றும் சிம்பு தெரிவித்தார். இந்த பேட்டியின்போது இயக்குனர் விஜய்சந்தர் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply