shadow

simbu and nayanபிரபல நடிகை நயன்தாரா இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு வந்தாலும், அவருக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியது சிம்புதானாம்.

சிம்புவும் நயன்தாராவும் “வல்லவன்” படத்தில் நடித்தபோது காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். பின்னர் இருவரும் அவரவர் படங்களில் பிசியாக இருந்ததால் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளக்கூட இல்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று அதிகாலை மிகச்சரியாக 12 மணியளவில் சிம்பு நயன் தாராவுக்கு ““Many more happy returns of the day nayan 🙂 have a fantastic year … God bless u!” என பிறந்தநாள் வாழ்த்தை தனது டுவிட்டர் அக்கவுண்ட் மூலம் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply