மாநாடு வெற்றியால் ’வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு செம வியாபாரம்

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வியாபாரம் சுறுசுறுப்பாகியுள்ளது.

சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து அடுத்த வருடம் கோடை விடுமுறையின்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு மிகப்பெரிய வியாபாரம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.