13நேற்று ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் பாடல்களும், டிரைலரும் வெளியாகியது. இந்நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கோச்சடையான் பாடல்கள் குறித்தும், டிரைலர் குறித்தும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். கோச்சடையான் டிரைலர் ஒரே நாளில் 6 லட்சத்திற்கு அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் கோச்சடையான் பாடல்கள் குறித்து, டிரைலர் குறித்தும் சிம்பு, நயன் தாரா மற்றும் செல்வராகவன் ஒரே நேரத்தில் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளார்கள். அவர்கள் செளந்தர்யா ரஜினிகாந்த் உடனடியாக நன்றியும் தெரிவித்துள்ளார்.

சிம்பு @sound_a-rajni- என்ற டுவிட்டர் பக்கத்தில் கோச்சடையான் பாடல்கள் குறித்து கூறியபோது ‘தலைவர் மீண்டும் வந்துவிட்டார்’ என்று கூறியுள்ளார். மேலும் லதா மேடம் பாடிய பாடல் மிகவும் அருமை என்று விமர்சித்துள்ளார். இதற்கு உடனடியாக செளந்தர்யா நன்றி என்று கூறி பதிலளித்துள்ளார்.

இதே நேரத்தில் டுவிட்டர் இந்த பக்கத்திற்கு வந்த நயன்தாரா “மிகப்பெரிய சாதனையாளர் மீண்டும் எழுச்சி பெற்று வந்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த நேரத்தில் செல்வராகவனும் அதே பக்கத்தில் வந்து கோச்சடையான் டிரைலரை நாம் மிகவும் நேசிப்பதாக கூறினார். இதற்கு பதிலளித்த செளந்தர்யா, தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. ஆனாலும் பாடல் வெளியீட்டு விழாவில் உங்களை மிஸ் செய்தேன் என்று கூறினார். அதற்கு பதிலளித்த செல்வராகவன் கோச்சடையான் படத்தின் வெற்றிவிழாவுக்கு வருகிறேன் என்று கூறினார்.

Leave a Reply