shadow

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து சிம்பு அடுத்ததாக பத்து தல என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் மார்ச் முதல் தேதி முதல் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதுவரை கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

கிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது