’மாநாடு’ ரிலீஸ் தள்ளிவைப்பு ஏன்?

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் எதிர்பாராத காரணத்தினால் ‘மாநாடு’ ரிலீஸ் தேதியை தள்ளி போவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கோலிவுட் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது ‘மாநாடு’ திரைப்படத்தின் ஒருசில பைனான்ஸ் பிரச்சனை இருப்பதாகவும், அந்த பிரச்சனை இன்று இரவுக்குள் தீர்க்கப்பட்டு நாளை ரிலீஸ் செய்ய முயற்சி நடப்பதாகவும், ஒருவேளை நாளை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ‘மாநாடு’ ரிலீஸ் குறித்த தகவலை இன்று இரவு தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.