இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சிம்புதேவன் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தற்போது விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் “வாள்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை அடுத்து விஜய், தன்னிடம் நீண்ட நாளாக மானேஜராக வேலை பார்த்த பி.டி. செல்வகுமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்க உள்ளார்.

தற்போது சிம்புதேவன், அருள்நிதியின் நடிப்பில் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி மூன்றாம் வாரம் ரிலீஸ் ஆகிறது. இந்த பட ரிலீஸுக்கு பின்னர் விஜய் படத்துக்கான திரைக்கதையை தயார் செய்ய உள்ளதாக சிம்புதேவன் கூறுகிறார்.
சிம்புதேவன் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா நடிப்பார் என கூறப்படுகிறது. ப்ரியங்கா சோப்ரா ஏற்கனவே ‘தமிழன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply