சிம்பு-கீர்த்தி சுரேஷ் காதலா? வைரலாகும் டுவிட்டுக்கள்

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

’மாநாடு’ திரைப்படம் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது என்றும் இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த ’மாநாடு’ டீமுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேச்க் இந்த டுவிட்டுக்கு நன்றி கூறிய சிம்பு, ஹார்ட் எமோஜியை பதிவு செய்தார். இதற்கு கீர்த்தி சுரேஷூம் ஹார்ட் எமோஜியை பதிவு செய்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டு விட்டதாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.