shadow

சிம்புவின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ராம் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் சிம்புவின் 50வது படம் என்ற சிறப்பு உள்ளது.

சிம்புவின் 47வது படம் மாநாடு என்பதும், அவருடைய 48வது படமாக பத்து தல என்பதும், 49வது திரைப்படமாக ‘கொரோனா குமார்’ என்ற திரைப்படம் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சிம்புவின் 50வது திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்க உள்ளார்.

இந்த படம் ஒரு இளைஞன் உலகம் முழுவதும் சுற்றுவதால் ஏற்படும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் கதையம்சம் கொண்டது