வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்ததன் மூலம் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் தீ பற்றிக்கொண்டது. இருவரும் இந்நாள் வரை காதலர்களாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காதலில் சற்று விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

அந்த விரிசலுக்கு காரணம் மீண்டும் இணைந்த சிம்பு, நயன்தாரா ஜோடி தானாம்.

சிம்பு – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு ஒரு ஹீரோயினை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நயன்தாராவுக்கு தனது படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கான கதையையும் கூறியுள்ளாராம் இயக்குனர் பாண்டிராஜ். கதை மிகவும் பிடித்துப்போக, நயனும் ஓகே சொல்லிவிட்டாராம். கிட்டத்தட்ட லிவ் இன் பார்ட்னர்கள் போல இருந்து பின்னர் பிரிந்துபோன சிம்புவையும், நயன்தாராவையும் ஜோடி போட வைத்ததன் மூலம் படத்துக்கு ஏக பப்ளிசிட்டி பைசா செலவில்லாமல் கிடைத்துவிட்டதாக தெம்பில் இருக்கிறாராம் இயக்குனர்.

ஆனால் விஷயம் கேள்விப்பட்ட சிம்புவின் இப்போதைய காதலியான ஹன்சிகாவோ கலவரமாகிப் போயிருக்கிறாராம். எல்லாரும் அப்பவே சொன்னாங்க, நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன் என்பதுதான் இப்போது அவர் அடிக்கடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனமாம்!

ஏற்கெனவே சிம்புவை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டார் பாண்டிராஜ். இப்போது நயன் – சிம்பு பகுதிகளை இயக்க தயாராகிவிட்டாராம்.

Leave a Reply