ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் பிரமாண்டமான படத்தை இயக்கிய செல்வராகவன், தனது அடுத்த படத்தை தொடங்கிவிட்டார். மிகவும் எதிர்பார்த்த இரண்டாம் உலகம் படுதோல்வி அடைந்ததால் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் செல்வராகவன்.
சிந்துபாத்’ கதைக்கு மிகவும் பிரமாண்டமாக திரைக்கதை அமைக்கும் பணியை முடித்துவிட்ட செல்வராகவன் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது.
சரித்திர பின்னணியுடன் விறுவிறுப்பாக உள்ள இந்த கதைக்கு பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இவர் இரண்டாம் உலகம் படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக செல்வராகவனுடன் சிம்பு இணைந்து பணிபுரிய இருப்பதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.