shadow

1625603_758153774220764_8284420808709950015_n

பல இளவயது நண்பர்களும் , யோகபாதைக்கு வரும் நண்பர்களும் அடிக்கடி கேட்கும் கேள்வி தான் “சித்தியும் ,முக்தியும் பெற இல்லறம் தடையா?.”

. முனிவர்களின் தவத்தை கெடுக்க அழகிய பெண்களை அனுப்பி தவத்தை குலைபபதாக புராணம் கூருகிறது பெண்ணுடன் சேர்வதால் விந்து விட்டதால் யோகம் கைகூடாது ஆகையால் பிரமாச்சரியம் அவசியம் .. என்கிறார்கள் ..எனவே .யோகபாதைக்கு திருமணம் தடையாக இருக்குமா? சிறிது ஆராய்வோம் .

. “முனிவர்களின் தவத்தை கெடுக்க அழகிய பெண்களை அனுப்பி தவத்தை குலைபபதாக புராணம் கூருகிறது”

புராணங்கள் உண்மை கதைகள் . உண்மையின் அடிப்படையில் பலரும் பலவித கதை சொல்லி உள்ளார்கள் புராணங்கள் கூறறு ஆராய படவேண்டும் . தவம் என்பது பலவகை படும் வாசி யோகமும் தவம் . சிவ யோகமும் தவம் . .

அதில் “சிவயோகம் “ என்ற தச தீக்ஷ்சை காலத்தில் மட்டும் பெண்ணுடன் சேர்வது தவிர்க்கப்படவேண்டும் . அதிலும் குறிப்பாக முதல் மூன்று ஆண்டுகள் கடுமையாக போகம் தவிர்க்கவேண்டும் . ஏனென்றால் இந்த காலத்தில் விந்து நீர்த்து விடும் . எழுச்சி இருக்காது . இந்த காலத்தில் குழந்தை பிறந்தால் அது குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கும் . இதை காம தகனம் என்பார்கள் .ஆகையால் சிவயோகத்தை 40 வயதிற்குப்பின் செய்ய சொல்கிறார்கள். 50 வயதில் செய்வது நல்லது .

இளவயது இல்லறம் தவம் செய்ய உதவும். சிவயோகம செய்ய உதவும் .சிததிக்கு பின்னும் உதவும் .
“விந்து விட்டதால் யோகம் கைகூடாது” எபதன் பொருள் .
விந்து என்பது பரி பாசை . ஆக்ஞா என்ற சுழிமுனைக்கு விந்து என்று பெயர் . சுழி முனையில் மனதை குவித்து வாசி யோகம் செய்யாவிட்டால் முழுமையான யோகா சித்தி கிடைக்காது என்பது பொருள் .
சித்தர்கள் இது பற்றி சொல்வதை பார்ப்போம் .

ஆறான இல்லறமே சக்தியென்று
அமர்ந்தி திருப்பான் கோடியில் ஒருவன் தானே
இராமதேவர் சிவயோகம் . பாடல 19

ஒருவனடா கோடியில் ஒருவ னுண்டு
உலகத்தோடு ஒற்று மனதறிவாய் நிற்பான் .
சிருவனடா வருமைல்சென்று நிற்பான்
சித்தது மிகுந்தது நிற்பவன் அவனாகும்
குரு மொழியை மறவாதான் குருவேயாகும்
குண்டலியின் நந்தி ஒளி கூறுவான்பார்
திருவிருந்த பதிஅறிந்து வாலை பூசை
செவ்வியை செய்தவன் சித்தன் சித்தன்
இராமதேவர் சிவயோகம் . பாடல 20
பொருள்
ஆறு உயிர்களுக்கும் மனிதர்களுக்கு நன்மை தருவது போன்று இல்லறம் சித்திக்கும் முக்க்திக்கும் சக்திகொடுக்கும் என்பதை கோடியில் ஒருவர் அறிவார் , அவர் ஆறு தலங்க்களை அறிந்து சிவயோகத்தில் வாலை பூசை செவ்வையாக செய்வார் . சித்துகள் அவரிடம் இருக்கும் . சிறு குழந்தைபோல் ஒளிவு மறைவு அற்ற வாழ்க்கை வாழ்வார் . வறுமையில் வாழவர் போல் எளிமையாக இருப்பார் சிதர்கள் சொன்ன குரு மொழியை மறவாதவர் சாதாரண உலக மக்கள் போல் வாழ்வார். மனதை நெறிபடுத்தி அறிவின் வழியில் இயக்குவார் .

வாசி யோகத்தில் குண்டலி எழும் வகையும் அதன் மூலம் நந்தி ஒளி என்ற வாலை என்ற பூரணன் என்ற இறைவனை காணும் வழி சொல்வார் . இவர்தான் சித்தர் சித்தர்

எனவே வாசி யோகம் செய்தபின் சிவயோகம் செய்யவும் , சித்திபெற்று சித்தன் ஆவதற்கும் , சித்தர் கல்வி சொல்லி கொடுப்பதற்ககும் இல்லறம் சக்தி கொடுக்கும் என்று ராம தேவர் உறுதிபட சொல்கிறார் . ஏன் என்று பார்ப்போம் .

ஆண்தன்மை கொண்ட உயிர் சக்தி விந்துவாக (அகாரம்) இருக்கும் வரை அதன் ஆயுள் இரண்டு மாதம் பெண்தன்மை (உகாரம்) கொண்ட உயிர்சக்தி கரு முட்டை யாக உருவானால் அதன் வாழநாள் 30 நாட்கள் . இரண்டும் தாயின் கருப்பையில் இணைந்தால் ( மகாரம் ) அதன் வாழ்நாள் 2௮0 நாட்கள் . கருப்பை குழந்தை சிற்று அண்டமாகிய கருப்பையில் ( உகாரம் ) (நேர்மறை உயிர் சக்தி ) பெண்தன்மை யுடன் உள்ளது அது கருப்பை விட்டு வெளியே வந்து பிரபஞ்ச சக்தியுடன் (அகாரம் ) இணைந்து மனிதனாய் (மகாரம் ) வாழ்ந்தால் அது 120 ஆண்டு வாழும . எனவே இணைதல் ஆயுளும் பலமும் கொடுக்கும் .

கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்தில்
மண்டலம் கொண்டுரு பாலும் வெளி நிற்கும்
வண்டியை மேற்கொண்டு வாநீர் உருட்டிட
தண்டோருகாலும் தளராது அங்கமே .
திரு மூலர் திரு மந்திரம் பாடல் ௮2௮
பொருள்
ஒத்த மனமுடைய ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்பம் துயித்தல் பரியங்க யோகம் . அவர்களின் உடலின் உள்ள அக்கினி , சூரிய , சந்திர மண்டலங்கள் .. பிரபன்ச்சத்தில் உள்ள அக்கினி , சூரிய , சந்திர மண்டலங்களில் ஒன்றி பலம பெறும். அவர்களின் சுக்கில சுரோனித இழப்பால் உடல் முதுமை அடையாது .

அகத்தியர் முடிவு .
ஆண்தானால் பெண்வேண்டும் பெண்ணுக் காணும்
அல்லாட்டல் ஒன்றுமில்லை அலைச்சல் தானே
அகத்தியர் சௌமிய சாகரம் பாடல் 223
பொருள் .
ஆனாகபிரந்தவருக்கு பெண்ணும் ,பெண்ணாக பிறந்தவர்க்கு ஆணும் வேண்டும் . அப்படி இல்லை என்றால் எந்த சித்தியும் கிடைக்காது . தனித்து வாழ்வது வீணான முயற்சியாகும்.
.

.
இல்லறம் சித்தி கொடுக்குமா ?
இதற்கு சித்தர்கள் சொல்வதை பார்ப்போம்
அயயாமின்றி இல்லறத்தில் இருந்தே சிதது
அறிந்து மனக்களிப்பாலே அசடு நீக்கி
நோயவின்ரி பிறப்பிறப்ப தனை நீத்து
நீணிலத்தில் ஞான சித்தனாக வாழ்வான்
கோரக்கர் சந்திர ரேகை பாடல் 7௮ பக்கம் 19
இல்வாழ்கையி இருந்து கொண்டு சித்தி அடையும் மார்கத்தை கடை பிடி . சந்தேகம் வேண்டாம் இதனால் பேரின்பம் என்ற மன மகிழ்ச்சி உருவாகும் . உடலில் உள்ள மாசு நீங்கும் . ஆகையால் பிறப்பு இறப்பு அற்ற காய சித்தி நிலை அடைவாய் . மற்றும் ஞானம் பெற்று ஞான சித்தனாக வாழ்வாய் .

திருவள்ளுவர் சொல்வதை பார்ப்போம் .
அறத்தாற்றின் இல்ல்வழ்கை ஆற்றின் புறத்தாற்றின்
போவோய் பெறவது என்.
.திருக்குறள் பாடல் 46
பொருள்
அறவழியில் இல்வாழகை நடத்தினால் வரும் பயனைவிட துறவறத்தில் கிடைபத்ர்க்கு எதுவும் இல்லை
ஆற்றின் ஒழுக்கி அறனிழுகா இல்வழ்கை
நோற்பாரின் நோனமை உடைத்து
திருக்குறள் பாடல் 49
பொருள் .
அறவழி வழு வாது இல் வாழ்க்கை வாழ்பவர் துறவு வழக்கை வாழபவரைவிட மேன்மையானவர் .

காலங்கி நாதர் சொல்வது
இருந்து நிலை பெற்றவனே ராசயோகி
இல்லறத்தை காத்தவனே ஜீவன் முக்க்தன்
காலங்கி நாதர் தீஷை விதி பாடல் 36
பொருள்
இல்லறவாழ்வில் இருந்து யோகா முறைகலில் நிலைத்து கடைப்பிடித்து வெற்றிபெற்றவர் ராஜ யோகி ஆவார் . அவரே ஜீவன் முக்தர் .

கோரக்கர் தீர்ப்பு

மாயை நிறை பேரின்ப மங்கை தன்னால்
மாயாமல் இருப்பதற்கு ஆண்பெண்ணாக
சாயை கொண்டு அமைத்திட்டார் அய்யன்தானும்
சடம்விட்டுப் போவதர்காய் படைக்கவில்லை
கோரக்கர் சந்திர ரேகை பாடல் 62
பொருள்
.
மாயாசக்தி யாக பேரின்பம் தருபவள் பெண் .ஆவளுடன் சேர்ந்து இரருப்பதால் இறந்து போவோம் என்பது தவறு . அப்படி இறந்து போக ஆணையும் பெண்ணையும் இறைவன் படைக்கவில்லை . பிரபஞ்சத்தில் இறைவன் சக்தி சிவனாக உள்ளன் அவர்களின் சாயலாக ஆணையும் பெண்ணையும் நீண்டகாலம் பேரின்பம் பெற்று வாழ படைத்தான்

இத்தரையில் மறைத்து வைத்தார் தீட்சை காணார்
இல்லறம்தான் இகபரத்தின் மோச்ச வீடே
கோரக்கர் சந்திர ரேகை பாடல் 54
பொருள்
தச தீடசை செய்து முக்தி பெறாதவர் தான் இல்லறத்தில் இருந்தால் முக்திபெற முடியாது என்று உலகில் சொல்லிவைத்தார் . அது உண்மை இல்லை . இல்லறம்தான் உலகவாழ்வில் மற்றும் யோகசாதனையில் மோட்சம் என்ற முக்தி தரும் .
நாம் நடை முறை செய்தியாய் அறிவது

ஆதி சங்கரர் முக்தி அடைய விரும்பினார் ,. தேவி அவரை இல்லற இன்பம் அறிந்துவர சொன்னார் . அவர் ஒரு சிட்டு குருவி உடலில் புகுந்து இல்லறம் அறிந்தார் என்பர் . சிலர் , அவர் ஒரு அரசனின் பிணத்தில் புக்கி இல்லவாழகை அறிந்தார் என்பார். அதன் பின் மோட்சம் பெற்றார் .
திருஞான சம்பந்தர் , ஆதிசங்கரர் , வள்ளலார் , விவேகானந்தர் ஆகியோர் இளம் வயதில் பரு உடல் நீத்தனர் இராமகிருஷ்ண பரமஹம்சரும் 50 வயதில் பரு உடல் நீத்தார் .
எனவே துறவு வாழ்க்கையில் நீண்ட ஆயுள் கிடைக்காமலும் போகலாம்

Leave a Reply